25.1 C
Jaffna
January 3, 2025
Pagetamil
உலகம்

புகலிட உரிமையை தற்காலிகமாக நிறுத்த போலந்து திட்டம்!

அண்டை நாடான பெலாரஸின் ஊடாக நுழைந்து, தனது நாட்டில் குடியேறி அல்லது மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் ஊடுருவலை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, புகலிட உரிமையை தற்காலிகமாக நிறுத்த போலந்து திட்டமிட்டுள்ளது.

“புகலிட உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவது இடம்பெயர்வு மூலோபாயத்தின் கூறுகளில் ஒன்றாகும்” என்று பிரதமர் டொனால்ட் டஸ்க் சனிக்கிழமை தெரிவித்தார்.

“நான் இதைக் கோருவேன், இந்த முடிவுக்கு ஐரோப்பாவில் அங்கீகாரம் கோருவேன்.
ஏனென்றால், (பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர்) லுகாஷென்கோ, (ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்) புடின்… ஆட் கடத்தல்காரர்களால் இதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். புகலிட உரிமையின் சாரத்திற்கு எதிராக இந்தப் புகலிட உரிமை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

போலந்தின் கூட்டணி அரசாங்கத்தின் மிகப்பெரிய உறுப்பினரான அவரது தாராளவாத குடிமைக் கூட்டணி (KO) குழுவால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டு முதல் போலந்தின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, பெருமளவிலான மக்கள், முக்கியமாக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து, பெலாரஸின் எல்லையை சட்டவிரோதமாக கடக்கத் தொடங்கினர். பெலாரஸ் மற்றும் அதன் நட்பு நாடு ரஷ்யா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட நெருக்கடி இது என, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் குற்றம்சாட்டப்பட்டது.

ரஷ்யாவும் பெலாரஸும் பொறுப்பை மறுத்துள்ளன.

தான் வழிநடத்தும் கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டுவந்த தேர்தலின் முதல் ஆண்டு நிறைவான ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறும் அரசாங்கக் கூட்டத்தில் இடம்பெயர்வு உத்தியை முன்வைப்பதாக டஸ்க் கூறினார்.

2023 டிசம்பரில் பதவியேற்றதில் இருந்து, டஸ்க் இடம்பெயர்வுக்கான கடுமையான கொள்கையைப் பின்பற்றினார், இது பரந்த பொது ஆதரவைப் பெற்றது, ஆனால் முந்தைய, தேசியவாத நிர்வாகத்தின் அணுகுமுறையை அவர் கைவிடுவார் என்று நம்பிய ஆர்வலர்களை திகைக்க வைத்துள்ளது.

ஜூலை மாதம், போலந்தின் பாராளுமன்றம் பெலாரஸ் எல்லையில் குடியேறியவர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை பாதுகாப்பு சேவைகளுக்கு எளிதாக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த மார்க்கத்தின் ஊடாக இலங்கையர்களும் ஐரோப்பாவிற்குள் நுழைவதும், பல தமிழ் இளைஞர்கள் பெலாரஸ் எல்லையில் அண்மைக்காலங்களில் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Update 2 – தென்கொரிய விமான விபத்து

east tamil

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

east tamil

Leave a Comment