28.8 C
Jaffna
October 3, 2024
Pagetamil
கிழக்கு

ரணிலின் கூட்டத்துக்கு தோட்டாவுடன் வந்தவர் கைது!

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த ச.இன்பராசா (22) என்ற மீனவத் தொழில் ஈடுபடும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்கஅமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கல் பலர் வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த இளைஞனும் இது போன்று வாகரை பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்.இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எதுவித குழப்பமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.

-க.ருத்திரன் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

Pagetamil

திருமலையில் பொலிஸாரின் முன் கொடூரமாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர்

Pagetamil

திருகோணமலையில் சிவில் சமூகத்துடன் கூட்டணி: சைக்கிள் அறிவிப்பு!

Pagetamil

திருமலையில் திண்ம கழிவு அகற்றும் வாகனங்களுக்கு கூட எரிபொருள் நிரப்ப நிதி இல்லை: நகராட்சி மன்றிலும் ஊழலா?

Pagetamil

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 73 .83 வீதம் வாக்குப்பதிவு

Pagetamil

Leave a Comment