ENG vs SL | முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

Date:

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியிஸ் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்து ஓல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் சதம் பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதம்.

122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை தொடங்கியது. கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். சண்டிமல் மற்றும் மத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடந்தனர். 89.2 ஓவர்களில் 326 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. 70 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. இருந்தும் அந்த அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் உறுதுணையாக ஆடினர். அதன் பலனாக 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டியது. இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத்...

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சியம்மன் கோயில் வழக்கில் தமிழில் உத்தரவு

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்