இறுதித்தீர்மானம் மேற்கொள்ள ரெலோ தலைமைக்குழுவுக்கு அதிகாரம்!

Date:

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (24) வவுனியாவில் ரெலோவின் மத்தியகுழு கூட்டத்தின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பொதுவேட்பாளர் தரப்பிலிருந்து ரெலோ விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்தியகுழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, பொதுவேட்பாளரை நிறுத்திய தரப்புக்களுடன் அவசரமாக சந்திப்புக்கும் ரெலோ நேரம் கோரியுள்ளது. அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் இந்த சந்திப்பு நடக்கும்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானின் புதிய வரைபை ஆராய்கிறது அமெரிக்கா

பிராந்தியத்திலிருந்து எரிசக்தி விநியோகம் குறைந்துள்ள நிலையில், மோதல் ஒரு முட்டுக்கட்டையில் நீடிப்பதால்,...

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்