நாமலை சந்தித்த சுமந்திரன்

Date:

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசியுள்ளார்.

வடக்கு கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து பேசப்பட்டதாக நாமல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்த விரும்புவதாக நாமல் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக சுமந்திரனிடம் நாமல் தெரிவித்தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட மாகாண பொறுப்பாளர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்தித்து குறைகளை விரிவாகப் பேசுமாறு கேட்டுக் கொண்டதாக காசிலிங்கம் கூறியுள்ளார்.

நாமல் எழுப்பிய இந்த விடயங்கள் குறித்து நாளை கூடவுள்ள இலங்கை தமிழ் அரச கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் பேசவுள்ளதாக சுமந்திரன் கூறியதுடன், வடக்கு, கிழக்கு மக்களுக்காக பாடுபடும் ராஜபக்சவின் முயற்சிகளைப் பாராட்டியதாகவும் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்