அடிக்கடி கையை உயர்த்திய அர்ச்சுனா; நீதிபதி கண்டிப்பு: சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்

Date:

வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அடுத்த அமர்வில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் கண்டிப்பான கட்டளையிட்டது.

இந்த வழக்கை இணக்கமாக தீர்த்துக்கொள்ளலாமென்ற அர்ச்சுனா தரப்பு கோரிக்கையை ஏனைய வைத்தியர்கள் நிராகரித்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, சில பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடக கவனத்தை ஈர்த்திருந்தார். இதன் பின் சமூக ஊடகங்கள் வாயிலாக கட்டுக்கடங்காமல் செயற்படும் ஒருவராக மாறியிருந்தார்.

அவர் வைத்தியத்துறை மீது குற்றம்சாட்டியிருந்தாலும், அது வெறும் வதந்தி வகையறவாகவே இதுவரை அமைந்துள்ளது. தனது குற்றச்சாட்டுக்கள் ஒன்றுக்கேனும் இதுவரை அவரால் ஆதாரம் முன்வைக்கப்படவில்லை. அவர் அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டு, 5 வைத்தியர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று (31) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த தவணையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், இன்றைய அமர்விலும் அர்ச்சுனா தரப்பினால் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி செலஸ்ரின் முன்னிலையாகியிருந்தார்.

வைத்தியர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் எனவும், நீதிமன்றத்தில் காலத்தை விரயமாக்காமல், வைத்தியர்கள் தொடர்ந்த வழக்கை இணக்கசபையின் மூலம் இணக்கமாக தீர்க்க விரும்புவதாக அர்ச்சுனா தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.

எனினும், வழக்காளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திருக்குமரன் இதை எதிர்தார். ஒருவர் அவதூறு பரப்பிவிட்டு, இவ்வாறு தப்பிக்கொள்ள முடியாதென சுட்டிக்காட்டினார்.

தனது தரப்பு சட்டத்தரணி செலஸ்ரின் சமர்ப்பணங்களை முன்வைத்துக் கொண்டிருந்த போது, அதில் திருப்தியடையாத அர்ச்சுனா அடிக்கடி கையை உயர்ந்தி, எழுந்து நின்று பேச முற்பட்டார். இது அடிக்கடி நிகழ்ந்ததால் நீதிபதி கடும் தொனியில் கண்டித்தார். அர்ச்சுனாவை உட்காருமாறு அவரது சட்டத்தரணியும் கையால் சைகை செய்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடுதியில் அர்ச்சுனா தங்கியிருப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அதனையும் இணக்கப்பாடாக முடிக்க விரும்புவதாக அர்ச்சுனா தரப்பு தெரிவித்தது.

எனினும், அதற்கும் வழக்காளிகள் உடன்படவில்லை.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருக்கிறேன் என்ற போர்வையில் அர்ச்சுனா 3 அறைகளை ஆக்கிரமித்துள்ளதையும், அதில் 3 அறைகளுக்கான கட்டணங்கள், ஏனைய 3 வைத்தியர்களின் சம்பளத்தில் கழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினர்.

அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அர்ச்சுனா தங்கியுள்ள விடுதியில் இருப்பதாகவும், அதனாலேயே இதுவரை அர்ச்சுனா விடுதியை காலி செய்யவில்லையென்றும் அவர் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

நீதிமன்ற கட்டளையை மீறி அர்ச்சுனா பேஸ்புக் லைவ் வீடியோக்கள் வெளியிடுவது சுட்டிக்காட்டப்பட்ட போது, இது தொடர்பில் அர்ச்சுனாவை அறிவுறுத்தியதாகவும், அவரை மேலும் அறிவுறுத்துவதாகவும், இனிமேல் அவ்வாறு செயற்படமாட்டார் என்றும் அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

அர்ச்சுனா தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அடுத்த தவணையில் கட்டாயம் முன்வைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு, செம்ரெம்பர் 11ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்