ஜீவன் வழக்கை தீர விசாரிக்க உத்தரவு!

Date:

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தேக நபராக ஏற்றுக்கொள்ளாது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பொலிஸாருக்கு நேற்று (29) உத்தரவிட்டார்.

நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நான்கு பேர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகி இருந்தனர். ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷான் குலதுங்க, சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சிவன்ஜோதி யோகராஜா ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

நுவரெலியா நீதிமன்ற நீதிபதி N.W.K.L பிரபூதிகா லங்காங்தனி முன்னிலையில் அவர் முன்னிலையாகி இருந்தார்.

இவ்வழக்கு தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பெயர் எவ்விடத்திலும் பரிந்துரைக்கப்படாததை நீதவான் சுட்டிக்காட்டினார். இவ்வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அன்றைய தினம், இவ்வழக்கினை சரியாக விசாரித்து விசாரணைகள் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்