ரஷ்யாவின் போரில் இலங்கையர்கள் சண்டையிடுவது தொடர்பாக இலங்கையின் புதிய முன்மொழிவு

Date:

ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை மற்றும் ரஷ்ய அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டு செயற்குழுவொன்றை நிறுவ இலங்கை முன்மொழிந்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இன்று ரஷ்யாவில் உள்ள பிரதி அமைச்சர் அந்திரேய் ருடென்கோ மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கேர்ணல் ஜெனரல் ஏ.வி.போமின் ஆகியோரை சந்தித்த போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஜூன் 26 முதல் 27 வரை ரஷ்ய கூட்டமைப்பிற்கு விஜயம் செய்தது, அங்கு இரு நாடுகளும் ரஷ்ய ஆயுதப் படைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை ஒப்பந்த அடிப்படையில் திருப்பி அனுப்பும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட ஒப்புக்கொண்டன.

போரில் கொல்லப்பட்ட 17 இலங்கையர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், தொடர்பு கொள்ள முடியாத இலங்கையர்களின் அவல நிலை, தானாக முன்வந்து நாடு திரும்புவதற்கான சாத்தியம், ஒப்பந்தங்களை முன்கூட்டியே நிறுத்துதல் மற்றும் ஊதியத்தை முறைப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்