யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

Date:

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பலே குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

“திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்