இலங்கை

சுகாதாரமற்ற தெருவோர வியாபாரம். மூவரிற்கு 35,000/= தண்டம்

திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் கடந்த (மே) மாதம் 29ம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் சில வியாபார நிலையங்கள் இயங்கியமை பரிசோதனையில் இனங்காணப்பட்டது.

அவ்வாறு இனங்காணப்பட்ட மூன்று வியாபார உரிமையாளர்களிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் வழக்குகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் மூவரிற்கும் மொத்தமாக 35,000/= தண்டம் அறவிட்டதுடன் கடும் எச்சரிக்கையும் வழங்கினார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜீவனை கைது செய்ய உத்தரவு

Pagetamil

கிளிநொச்சி வந்த வாகனம் விபத்து

Pagetamil

யாழில் நகைச்சுவை பாணி நிகழ்வு: தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போவதாக சில தனிநபர்களும், சிறு கட்சிகளும் உடன்படிக்கை!

Pagetamil

ஹிருணிகாவுக்கு பிணை

Pagetamil

ஊர்காவற்றுறை கோயிலில் நகை கொள்ளையடித்த உதவிக் குருக்கள் கைது!

Pagetamil

Leave a Comment