டிசைன் டிசைனாக வாள்கள்… யாழ்ப்பாண ரௌடி கைது!

Date:

வெளிநாட்டுக்கு தப்பியோடிய ஆவா குழு ரௌடியின் தொடர்பில் இயங்கிய ரௌடியொருவர் அச்சுவேலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட், குட்டையன்புலம், வசாவிளான் கிழக்கு பகுதியை சேர்ந்த தனுஸ்ராஜ் என்பவரே நேற்று (7) மாலை யாழ்ப்பாணம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலுள்ள ஆவா குழு ரௌடியொருவருக்கு சொந்தமாக ஈவினைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மோட்டார் சைக்கிள் டிஸ்ஸைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 5 வாள்களும், 3 கஜேந்திர வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது, ​​தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஆவா குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரசாத் ஜாய் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்