ரயில்- கார் விபத்து: இருவர் பலி

Date:

எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை எடேரமுல்ல பகுதியில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் மீது, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்த 54 வயதுடைய பியகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கொழும்பு பிரதேசத்தில் தனியார் துறையில் பணிபுரியும் 34 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எடேரமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்