24.8 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

தமிழ் பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு: ரெலோ தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சிக்கு தாம் ஆதரவளிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ரெலோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

கடந்த கால எமது அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு எழுந்துள்ள சூழ்நிலையிலும் காலத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எமது கட்சியின் தலைமை குழு எடுத்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையானது வெற்றியளிப்பதற்கு தமிழ் தேசிய தரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம்.

அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் தற்போதைய முயற்சிக்கு நமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையின் சொத்து கையிருப்பு வீழ்ச்சி

east tamil

கணவன் வெறிச்செயல்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

Pagetamil

வேலைக்காக காத்திருந்து விரக்தியில் தாதி தற்கொலை

east tamil

கச்சதீவு பெருவிழாவுக்கான ஏற்பாடு

Pagetamil

GovPay ஆரம்பம்

east tamil

Leave a Comment