Pagetamil
இலங்கை

சாவகச்சேரி குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தவர் தலையில் பெற்றோல் ஊற்றி தீமூட்டினார்: யாழில் பயங்கரம்!

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்

சாவகச்சேரியை சேர்ந்த 45 வயதான பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.

இந்த பெண் திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், பிறிறொரு ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் கொஞ்செஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆணை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment