யாழ் போதனா வைத்தியசாலை விடுதிக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்த ரௌடி, அதே விடுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டார்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதிக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட ரௌடி, தற்போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு காயத்திற்கிலக்கான தனது நண்பனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்த மேற்படி ரௌடி, வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளுடன் புகுந்தார்.

இது குறித்து கேள்வியெழுப்பிய வைத்தியசாலை உத்தியோகத்தரையும் தாக்கியிருந்தார். வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ரௌடியை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்த ரௌடி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில் முறையாக கவனிக்கப்பட்டதாலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்