யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை தொழிற்சாலைக்குள் அடைத்து வைத்த ஆணும், பெண்ணும் கைது!

Date:

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (20) இந்த சம்பவம் நடந்தது.

தெல்லிப்பளை சுகாதர வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பன்னாலை பகுதியில் இயங்கி வந்த அனுமதியற்ற உணவுப்பொருள் தயாரிக்கும் நிலையமே இன்று சோதனையிடப்பட்டது.

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமையுள்ள பிரதேசவாசியொருவரும், சிங்கள பெண்ணொருவரும் அந்த தொழிற்சாலையை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அந்த தொழிற்சாலை இதுவரை முறைப்படியான பதிவுகளை பூர்த்தி செய்திருக்கவில்லை.

இன்று பதில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்காக சென்றுள்ளனர். தொழிற்சாலை பதிவு செய்யப்படாததை குறிப்பிட்டு, அவர்கள் மீது சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உரிமையாளர்களின் அடையாள அட்டையை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கேட்ட போது, சுகாதார பரிசோதகர்கள் இருவரையும் தொழிற்சாலைக்குள் வைத்து உரிமையாளர்கள் பூட்டிவிட்டனர்.

இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர், தெல்லிப்பளை பொலிசார் தலையிட்டு, பொதுச்சுகாதார பரிசோதகர்களை மீட்டெடுத்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தொழிற்சாலை உரிமையாளரும், பெண்ணும் தலைமறைவான நிலையில், இன்று மாலை அவர்கள் இருவரும் தெல்லிப்பளை பொலிசரால் கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

டுபாயில் கைதுசெய்து அழைத்துவரப்பட்ட இந்தப் பெண் யார் தெரியுமா?

டுபாயில் இருந்து இரண்டு பாதாள உலக குற்றவாளிகளுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கிய நால்வர் கைது!

பேராதனை பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் பேராதனை பல்கலைக்கழக...

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்