சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




