முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வ அஞ்சலி: சர்வதேச மன்னிப்புசபை செயலாளரும் அஞ்சலி!

Date:

2009 இல் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து இன்று முள்ளிவாய்க்காலில் உணர்வபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச மன்னிப்புசபையின்  செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் அவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளை விட இம்முறை அதிகளவான மக்கள்  நினைவஞ்சலியில் கலந்துகொண்டார். காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்தவர்கள் நினைவாக தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கண்ணீர், அழுகையென அந்த பகுதியே சோகத்தில் மிதந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சர்வதேச மன்னிப்புசபை செயலாளர் நாயகம் கலந்து கொண்டதாலோ என்னவோ பாதுகாப்பு தரப்பினரின் அடாவடி இம்முறை அங்கு வெகுவாக குறைந்திருந்தது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்