பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தமிழ் நடிகையை பலாத்காரம் செய்த அம்மன் கோயில் பூசாரி!

Date:

சென்னை அம்மன் கோயில் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில், பூசாரி கார்த்திக்கை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக, வேறு சில பூசல்களும் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குள் எழுந்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 3 நாளாகவே, சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி குறித்த செய்தி மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது பெண் புகார் ஒன்றை தந்திருந்தார்.

அந்த புகாரில், “பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் பூசாரியாக உள்ள கார்த்திக் முனுசாமி எனக்கு நட்பானார்.. அவர் ஒருநாள் கோயில் தீர்த்தம் கொண்டுவந்து தந்தார்.. அதை குடித்ததுமே நான் மயக்கமடைந்தேன். பிறகு கண்விழித்து பார்த்த போது நான் நிர்வாணமாக படுக்கை அறையில் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

பிறகு கார்த்திக் முனுசாமிக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டபோது, எனனை திருமணம் செய்து கொள்வதாக சொன்னார். அவருக்கு முதல் மனைவி பிரியா இருந்தும், என்னுடைய வீட்டிலேயே எனக்கு தாலி கட்டினார். இதனால், கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தினார். இதனால், கருவுற்ற எனக்கு கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார்.

பிறகு விஐபி நண்பர் என்று வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் நெருக்கமாக இருக்க என்னை வலியுறுத்தினார். அவரது தோழி சுவேதா என்பவர், என்னை பாலியல் தொழிலுக்கு செல்ல கட்டாயப்படுத்தினார். கார்த்திக் முனுசாமியின் மனைவி பிரியா, இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக ஆள்வைத்து என்னை மிரட்டுகிறார்.

இதனால் மனமுடைந்த நான், அதே பாரிமுனை கோயிலுக்கு சென்று, இன்னொரு குருக்களான காளிதாஸ் என்பவரிடம் சொல்லி முறையிட்டேன்.. அதற்கு அவர், “கார்த்திக் என்னுடைய அண்ணன் மகன்தான். அவன் எப்போதும் இப்படித்தான். அவனுடன் நீ ஒன்றாக இருந்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும்?” கேட்டார்.

எனவே, என்னுடைய வாழ்க்கையை சீரழித்த கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் நடிகை தேவி கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, இந்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பூசாரி கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. அவரது செல்போனிலிருந்து ஏகப்பட்ட இளம்பெண்களின் ஆபாச போட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 6 வழக்குகளின் கீழ் வழக்கும் பதிவு செய்து, மாயமாகியிருக்கும் பூசாரி கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனிடையே, கோயில் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கார்த்திக் , தற்போது கோயில் அறங்காவலர் குழு முடிவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, சென்னையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அர்ச்சகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அர்ச்சகர், அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது எஸ்பிளனேடு போலீசில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மீண்டும் ஒரு புகார் போலீசுக்கு சென்றுள்ளது.. அதாவது, மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் விஸ்வகர்ம சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.. இந்த வழக்கில் கார்த்திக் மீது மட்டுமல்லாமல், கார்த்திக்கின் மாமா மீதும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நிர்வாகத்தினர் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக நிர்வாகிகளுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. பு

இதில் நிர்வாகிகளில் ஒருவரான பாலாஜி (27) என்பவரை தள்ளி விட்டதாகவும், அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பாலாஜி, எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமூகமாக போவதாக நிர்வாகிகள் உறுதி கூறியதன் பேரில் போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நிர்வாக தலைவர் சொல்லும்போது, “இந்த கோயில் பாரம்பரியமிக்கது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை நிர்வாகம் மேற்கொள்ளும்… யாருக்கும் ஆதரவாக இந்த நிர்வாகம் செயல்படாது” என்று நம்பிக்கை தந்துள்ளார்.

எனினும், தவறு செய்த அர்ச்சகர்களை நீக்குவதில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.

எனவே, இந்த விவகாரம் மேலும் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பதுங்கியிருக்கும் பூசாரி கார்த்திக், கைதானால், அதற்கு மேல் பல பூதாகரங்கள் கிளம்பும் என்றும் நம்பப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்