27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

ரூ.10,000 வரை கட்டணம்: யாழில் சிக்கிய விபச்சார விடுதி!

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று இன்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விபச்சார விடுதியாக செயற்பட்ட வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகளும், 3 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

நீண்டகாலமாக இந்த விபச்சார விடுதி இயங்கி வந்தது. சுழிபுரம், சங்கானை, கிளிநொச்சி பகுதிகளிலிருந்து யுவதிகள் அங்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ரூ.500 தொடக்கம் ரூ.10000 வரை கட்டணம் அறவிடும் யுவதிகள் அங்கு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்ளனர்.

அந்த வீட்டுக்கு வந்து, யுவதிகளை தெரிவு செய்து அழைத்துக் கொண்டு சென்று, யாழ் நகர விடுதிகளில் உல்லாசமாக இருக்கும் சேவையும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

நாளாந்தம் 20 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர். இன்று பொலிசார் சுற்றிவளைத்த போது, 3 வாடிக்கையாளர்கள் சிக்கியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

Leave a Comment