மாலைதீவுகளின் நடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
மாலைதீவில் அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சீன ஆதரவுடைய மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சியின் மொஹமட் முய்சு வெற்றிபெற்று, ஜனாதிபதியாகியுள்ளார்.
எனினும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை தற்போது, இந்திய ஆதரவு நிலைப்பாடுடைய முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் மாலைதீவுகள் ஜனநாயகக் கட்சி (எம்டிபி) கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆளும் தரப்புக்கு பாராளுமன்ற பெரும்பான்மை இல்லை.
ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
22 பெயர்களில், பெயரிடப்பட்ட 18 பேர் கபினட் அமைச்சர்களாகத் தொடர நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடிந்தது, நான்கு பெயர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை நிறுத்தி, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, எம்.பிக்கள் கட்டிப்புரண்டும் சண்டையிட்டனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
ކެނދިކުޅުދޫ ދާއިރާގެ މެމްބަރު އީސާގެ ފައިގައި ހިފައި ކަނޑިތީމު މެމްބަރު ޝަހީމް ވައްޓާލާ މަންޒަރު. އެމްޑީޕީ ދޫކޮށް ޕީއެންސީއާ ގުޅުނު ސަރުކާރުގެ މެމްބަރުން މަޖިލީހަށް ހުރަސް އެޅުމާއެކު ތަޅުމުގައި ހަމަނުޖެހުން އަންނަނީ ހިނގަމުން. pic.twitter.com/mnmzvYKsrO
— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024
ދާދިފަހުން އެމްޑީޕީ ދޫކޮށް ޕީއެންސީއަށް ބަދަލުވި މެމްބަރުން ރިޔާސަތުގައި އިންނެވި މަޖިލީހުގެ ރައީސް މުހައްމަދު އަސްލަމަށް ޖަލްސާ ކުރިއަށްގެންދިޔުމުގެ ފުރުސަތު ދީފައި ނުވޭ. މުޅި ތަޅުމުން އިވެނީ ދުންމާރީގެ އަޑު. pic.twitter.com/1yv0wCNEAP
— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024
The videos coming out of Maldives Parliament today are insane 😂 pic.twitter.com/aSWf9q5GZo
— Cow Momma (@Cow__Momma) January 28, 2024
Dramatic visuals from Maldives Parliament as opposition MPs are prevented from entering Parliament floor ahead of Parliamentary approval of Muizzu's Cabinet. Vote was to take place today, but opposition has some reservations on Muizzu's Cabinet. pic.twitter.com/IunpHKxZ3P
— Sidhant Sibal (@sidhant) January 28, 2024



