ஹோட்டல் அறையில் காதலியை சுட்டுக்கொன்றவர் கைது!

Date:

புனேவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயது பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த பெண் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புனே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் ஹிஞ்சாவாடி லக்ஷ்மி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் அறையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இறந்தவர் வந்தனா திவேதி என அடையாளம் காணப்பட்டதாக பிம்ப்ரி சின்ச்வாட் போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் சனிக்கிழமை மாலை ஒரு நபருடன் ஹோட்டலுக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 நாட்களாக தங்கியிருந்த அந்த ஜோடி பகலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு அறைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அந்த ஜோடியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு ஓட்டல் அறையில் கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

காதலர் ரிஷாப் நிகாம் துப்பாக்கியால் வந்தனாவின் தலையில் சுட்டுக்கொன்றது தெரிய வந்தது. 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். தகராறு முற்றியதையடுத்து, இந்த கொலை நிகழ்ந்துள்ளது.

நிகாம் உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்தவர். இவருக்கு காதலியின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியுடன் நிகாம் வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வந்தனாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, இரவு 10 மணியளவில் ஹோட்டல் அறையில் இருந்து நிகாம் வெளியேறிய காட்சிகளும் கிடைத்துள்ளன.

இதன்பின், தப்பி சென்ற நிகாமை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்