Pagetamil
இலங்கை

பல்கலைக்கழக மாணவியை பகிடிவதைக்குள்ளாக்கிய 6 மாணவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவி ஒருவரை பகிடிவதையென்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் 23, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கற்கைகள் பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பகிடிவதை தொடர்பான முறைப்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அவசர இலக்கமான 1997க்கு கடந்த 14 ஆம் திகதி  நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

வீட்டுச்சாப்பாடு கேட்கும் தென்னக்கோன்!

Pagetamil

தையிட்டி சட்டவிரோத விகாரையில் மற்றொரு சட்டவிரோத கட்டிடம்

Pagetamil

பெட்டிசன் அனுப்பியவருக்கு நேர்ந்த கதி: வடக்கு விவசாய திணைக்கள சிக்கலில் மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்!

Pagetamil

பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 15 யுவதிகளும், 61 இளைஞர்களும் கைது!

Pagetamil

‘தமிழரசுக் கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் இவர்’: சாணக்கியனை வறுத்தெடுத்த பிமல்!

Pagetamil

Leave a Comment