வீட்டுக்கு தேங்காய் எண்ணெய் வாங்க கடைக்கு சென்ற வாலிபர் ஒருவர் வீட்டின் அருகே உள்ள படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
நாவலப்பிட்டி கோரகம்போய பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் வீட்டுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைப் பெறுவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்த அவர் தேங்காய் எண்ணெய் வாங்க எடுத்து சென்ங கண்ணாடிப் போத்தல் உடைந்து கழுத்தில் பலத்த வெட்டு விழுந்தது.
உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1