விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Date:

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த ஹட்டன் இலங்கை போக்குவரத்துசபை டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை முறையான விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்யுமாறு வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஹட்டன் இ.போ.ச டிப்போவின் நிர்வாகம் கோரியுள்ளது.

நேற்று முன்தினம் (15) கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து, வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ​​முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் பிரதான வீதியின் குறுக்கே சறுக்கி மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற பெண்ணொருவர் பிரதான வீதியின் குறுக்கே விழுந்துள்ளார். பேருந்து மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் ஆத்திரமடைந்து சாரதி மற்றும் நடத்துனரை கொடூரமாக தாக்கினர். இருவரும் காயம் அடைந்தனர்.

சாரதி தன்னைத் தாக்க வேண்டாம் என்று கெஞ்சினார், ஆனால் குழு அவரைத் தொடர்ந்து தாக்கியது, சாரதிக்கு காயம் ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் பேருந்தின் சாரதி வெல்லம்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என ஹட்டன் டிப்போ நிர்வாகம் தெரிவித்த போதிலும் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவித்தனர்.

விபத்தை தொடர்ந்து அங்கிருந்த சிலர் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கப்பதாகவும் டிப்போ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெல்லம்பிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹட்டன் இ.போ.ச டிப்போ ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

அந்த பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சாரதியை தாக்கியதை மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை,...

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்