அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின்பட்டியல் நிறுத்தம்: வடமாகாணத்தில் இனி ஈ-பில் மட்டுமே!

Date:

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து அமலுக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி அந்நாளில் இருந்து இலத்திரனியல் மின்பட்டியல் அனுப்பிவைக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.

குறித்த இலத்திரனியல் மின்பட்டியலை இ-பில் (e-bill) மற்றும் குறுந்தகவல் (SMS) மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் (e-mail) மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காக REG (இடைவெளி) கணக்கு இலக்கம் என டை (type) செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவலை (SMS) அனுப்பி பதிவு செய்யலாம்.

மேலும் EBILL (இடைவெளி) கணக்கு இலக்கம் (இடைவெளி) உங்களுடைய மின்னஞ்சல் என டைப் (type) செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பு பதிவு செய்யல்லாம்.

இதுபட்டுமல்லாமல் EBILL.ceb.lk என்ற இணையப் பக்கத்தின் ஊடாகவும் பதிவு செய்யலாம் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்