காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் குறைந்தது 471 பேர் கொல்லப்பட்டனர், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
“பாப்டிஸ்ட் மருத்துவமனைக்குள் கிரிமினல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு செய்த மிகப்பெரிய மற்றும் மிகவும் வன்முறை படுகொலையின் இறப்பு எண்ணிக்கை 471 ஐ எட்டியது, மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 314 பேர் பல்வேறு காயங்களுடன் உள்ளனர்” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனை மீதான தாக்குதல் காசாவிலுள்ள போராளிகளின் ரொக்கட் தவறினால் நிகழ்ந்தது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் கட்டிடங்கள் சேதமடையவில்லை, கார் தரிப்பிடத்திலேயே குண்டு வெடித்தது, இதனால் நோயாளிகள் பாதிக்கப்படவில்லையென ட்ரோன் காட்சிகளையும் இஸ்ரேல் வெளியிட்டது.
IDF releases drone footage of the Gaza hospital from this morning, showing damage to parking lot where it says a misfiring Islamic Jihad rocket fell causing last night's mass casualties, but that lack of damage to hospital itself & no crater indicate it wasn't an IDF strike pic.twitter.com/V3wgGGgZ7o
— Jeremy Sharon (@jeremysharon) October 18, 2023
ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 3,478 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 12,000 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் கூறியது.




