கடந்த 25ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவிருந்த முன்னாள் கொமாண்டோ சிப்பாய் ஒருவர் ஹங்வெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
அவருடன் இருந்த மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




