யாழில் தனித்திருந்த மூதாட்டி சடலமாக மீட்பு: மரணத்தில் சந்தேகம்!

Date:

வடமராட்சி அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்வாய் கிழக்கு பகுதியில் வசித்து வந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (89) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டி திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார். அவரது சகோதரியின் மகன் ஒருவர் கனடாவில் வசிக்கிறார். அவரே மூதாட்டியின் பராமரிப்பு செலவை கவனித்து வருகிறார்.

மூதாட்டி தனித்து வாழ்ந்து வந்த வீடு அமைந்துள்ள வளவுக்குள் மற்றொரு வீடும் அமைந்துள்ளது. அங்கு இளம் குடும்பமொன்று வசித்து வருகிறது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மாகாணசபை உறுப்பினராக அங்கம் வகித்த வர்த்தகர் ஒருவரின் மகள், இரண்டாவது திருமணம் செய்து, அந்த வீட்டில் வசிக்கிறார்.

கனடாவில் உள்ள அந்த மூதாட்டியின் மகன், அந்த குடும்பத்திற்கு பணம் அனுப்பியே பராமரித்து வந்துள்ளார். மூதாட்டியை பராமரிக்க பெண்ணொருவர் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி மூதாட்டிக்கு உணவு கொண்டு சென்றபோது, மூதாட்டி அசைவற்றிருந்ததாக அந்த வளவில் தங்கியிருந்த குடும்பத்தினர் தகவலளித்துள்ளனர். பொலிசார் தகவலளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற அவசர நோயாளர் காவு வண்டியினர், மூதாட்டி உயிரிழந்ததை உறுதி செய்திருந்தனர்.

இதை தொடர்ந்து கிராமசேவகர் ஊடாக சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீனாவில் காலணி தொழிற்சாலை தீவிபத்தில் 28 பேர் பலி

கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர...

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்