இன்று முதல் வீட்டிலிருந்தே வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெறலாம்

Date:

இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மேல் மாகாண மக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்