‘2025 முதல் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துங்கள்’: ஜனாதிபதி

Date:

2025ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு இந்த பணிப்புரையை வழங்கினார்.

இந்த ஆண்டும் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் எனவும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகளை நடாத்துவதற்கு பிள்ளைகளுக்கு சுமை ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு வழங்கிய பணிப்புரையிலும் காணப்படுகின்றது.

அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் பெறுவது, வயது வரம்பைத் தாண்டிச் செல்வது போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என அண்மையில் கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்