24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
உலகம்

மலேசியாவில் 3 இலங்கையர் கொலை விவகாரம்: கைதான இலங்கையர் மலேசிய பொலிசாரால் அடித்துக் கொலை?

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின், செந்தூலில் உள்ள வாடகை வீட்டில் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகளை எளிதாக்கும் வகையில் 7 வெளிநாட்டவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 20 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள்.

கடந்த திங்கட்கிழமை தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய இலங்கை சந்தேக நபர்களும், கொலைச்சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதிகளில்- மனைவியையும் இந்த 7 பேரில் உள்ளடங்குவதாகவும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீட்டில் மூன்று இலங்கையர்களும் பாகிஸ்தானியர் ஒருவரும் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தம்பதியினரின் தடுப்புக்காவல் செப்டம்பர் 29 ஆம் திகதி முடிவடைந்ததை அடுத்து, ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த சனிக்கிழமை காவலில் இருந்தபோது 43 வயதான கணவர் இறந்துவிட்டார். இதனால் விசாரணையில் உதவுவதற்காக மொத்தம் ஏழு சந்தேக நபர்கள் இன்னும் விளக்கமறியலில் உள்ளனர் என்று அவர் நேற்று (2) விக்டோரியா கழகத்தின் பள்ளி நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த மூவரும் பாகிஸ்தானியரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இரண்டு பிரதான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களது காவல் காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் அவர்களது காவலை நீட்டிக்க போலீசார் விண்ணப்பிப்பார்கள் என்றார்.

செப்டம்பர் 22 அன்று, கம்போங் கோவில் ஹிலிரில் உள்ள ஜாலான் பெர்ஹெண்டியனில் உள்ள ஒரு கடை வீட்டின் மேல் அறையில் மூன்று வடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைகள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. இறந்தவர்களில் இருவர் அந்த வளாகத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள், மற்றொருவர் திருமணமான தம்பதியின் மகன்.

இதற்கிடையில், காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் விசாரணையை பாதிக்காது என்று அலாவுதீன் கூறினார்.

ஏனெனில் இந்த வழக்கு இந்த வாரம் துணை அரசு வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்படுவதற்கான விசாரணை ஆவணங்கள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளன. கைதியின் மரணம் தொடர்பான விசாரணை புக்கிட் அமான் நேர்மை மற்றும் நிலையான இணக்கத் துறையின் கீழ் காவலில் உள்ள மரணங்கள் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, மலேசிய பொலிசாரால் அந்த இலங்கையர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment