கண்டி பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கையடக்க தொலைபேசியில் இரகசியமாக பதிவு செய்து சிக்கினார்!

Date:

போலி ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு அனுமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க பொலிஸாரிடம் வந்த கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையின் முன்னாள் அதிபர் பீ.கே.ஆர்.ரணசிங்க, மொபைல் போன் மூலம் தனது வாக்குமூலத்தை இரகசியமாக பதிவு செய்து கொண்டிருந்த போது பிடிபட்டார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் கையடக்கத் தொலைபேசி பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதிலிருந்து அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (23) காலை 9 மணியளவில் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அதிபர் கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்துள்ளார். அதற்கு முதல்நாள், சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பொலிஸார், நேற்று முன்தினம் (23) மீண்டும் வருமாறும், தொடர்ந்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்யுமாறும் அறிவித்திருந்னர்.

முன்னாள் அதிபர் சனிக்கிழமை (23)  வாக்குமூலம் அளிப்பதற்காக வந்து, கைப்பையை அருகில் இருந்த நாற்காலியில் வைத்தார். ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நாற்காலியை தனக்கு அருகில் நகர்த்தியபோது, ​​முன்னாள் அதிபர் நாற்காலியை மீண்டும் தனக்கு அருகில் கொண்டு சென்றார்.

சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைப்பையை சோதனையிட்டபோது, மொபைல் போன் சுமார் 15 நிமிடம் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலம் புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து, பொலிஸார் அதிபரை சந்தேக நபராகப் பெயரிட்டுள்ளனர். பின்னர் மாகாண கல்வி அமைச்சு அவரை பாடசாலையில் இருந்து மத்திய மாகாண கல்வி திணைக்கள அலுவலகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது. சம்பவம் தொடர்பிலான விசாரணையும் மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் அதிபரிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம்...

மாவீரர் தினம் – தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் – யாழ் மாநகர சபையில் கடும் அமளி –

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை...

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்