கிளிநொச்சி, புதுஐயன்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு கும்பலை ிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காட்டுக்குள் மாயமாகியுள்ளார்.
புதுஐயன்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு கோட்டைள் இயங்குவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) காலை 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர்.
அவர்கள் சென்றபோது, சிலர் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்துள்ளனர். பொலிசாரை கண்டதும் அவர்கள் காட்டுக்குள் தப்பியோடினர். அவர்களை பொலிசார் விரட்டிச் சென்றனர்.
நீண்டதூரம் விரட்டிச் சென்றும் அவர்களை பிடிக்க முடியாத நிலையில், திட்டமிட்ட இடத்துக்கு இருவர் திரும்பி வந்தனர். ஒருவர் வரவில்லை.
இதையடுத்து, பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1