யாழ் வாள்வெட்டில் காயமடைந்த பிடியாணைகள் உள்ள நபருடன் ஒன்றாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் சர்ச்சை!

Date:

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் அண்மையில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த தாக்குதல் நடந்தபோது, காயமடைந்தவருடன். பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரும் இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர், பல வழக்குகளில் தேடப்பட்டு, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடந்தபோது தன்னுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் ஒருவரும் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட சந்தேகநபருடன் பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரும் உடனிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கார் ஒன்றில் வந்தவர்களே இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்