ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த அறிவித்தலை விடுத்தார்.
புவனேக அலுவிஹாரே, ஜனக் டி சில்வா மற்றும் பிரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.




