ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை சனல் 4 காணொளி மூலம் எவரும் புரிந்து கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அப்போது சொன்னதற்கு மாறாக நடந்துள்ளது என்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 4 வருடங்களாக அனைத்து தண்டனைகளும் வழங்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 தொடர்பிலான கடிதத்தை தயாரித்து முடித்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியை சந்திக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணையை கோருவதாகவும் அவர் கூறினார்.




