ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (13) புதன்கிழமை மதியம் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ, மோரா தோட்டப் பகுதியில் இருந்து, ஹட்டனுக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூவரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




