கனடாவிலிருந்து வந்து யாழில் பழைய மாணவர் ஒன்றுகூடலில் நடனமாடியவர் திடீரென உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜன கல்லூரி ஒன்று கூடலில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை (26) இந்த சம்பவம் நடந்தது.

மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது.

இதன்போது கனடாவில் இருந்து வந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.

அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம்மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்