களுத்துறை சிறிகுருசா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பாடசாலை மாணவி ஒருவரும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தல்கஸ்வத்தை, தல்கஸ்வல மேல் பகுதியில் வசிக்கும் அய்யப்பிள்ளை யேசுதாசன் என்ற 54 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் அவரது 17 வயது மகளும் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் திரு.ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கு அமைய போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1