மீரிகம, வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலன் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இந்த கொள்கலன் லொறி மோதியுள்ளது.
ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரத சிக்னல்கள், மின்கம்பங்கள், புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தால், ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன.
இதனால் பல ரயில்கள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




