‘மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்காத கோபத்திலிருந்தேன்’: யாழில் மாதா சிலைகளை சேதப்படுத்தியவர் வாக்குமூலம்!

Date:

மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்த நிலையில், மாதா சிலைகளை சேதப்படுத்தியதாக யாழ்ப்பாணத்தில் கைதான நபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 4 இடங்களில் மாதா சிலைகள் நேற்று அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

வெகோ மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மாதா சிலைகள் மீது கல்லால் வீசி சேதமாக்குவது சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.

சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைதாகியிருந்தார்.

அவர் சைவ சமயத்தை சேர்ந்தவர். மனைவி கிறிஸ்தவர். அவர்கள் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

“பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். என்றாலும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். சம்பவ தினத்தன்று மதுபோதையில் இருந்தேன். அப்போது என்னை அறியாமல் மாதா சிலைகளை சேதப்படுத்தியிருக்கலாம்“ என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்