யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் நேற்று 4 இடங்களில் மாதா சிலைகளை சேதப்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுதுமலை தெற்கு, சாவற்காட்டை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெகோ ரக மோட்டார் சைக்கிளில் வந்து, சிலைகள் மீது கல்லெறிவது சிசிரிவி கமெராவில் பதிவாகியிருந்ததன் அடிப்படையில் சந்தேகநபர் கைதாகியிருந்தார்.



