ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் 3வது போட்டியில், இன்றைய 2ஆம் நாளில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 237 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களை பெற்றிருந்தது.
கடந்த போட்டியை போலவே, இங்கிலாந்தின் கப்டன் பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை நின்று அடித்தாடியதால்தான் இங்கிலாந்து இந்த 237 ஓட்டங்களை எட்ட முடிந்தது. ஸ்டோக்ஸ் 80 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ் 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சை ஆரம்பித்துள்ளது. தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்கள். டேவிட் வோர்னர் ஆட்டமிழந்தார். தற்போது வரை அவுஸ்திரேலியா 55 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.




