சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு நிர்வாண படங்களை அனுப்பிய சாரதி கைது!

Date:

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச புகைப்படங்களை எடுத்து வட்ஸ்அப் ஊடாக சுகாதார அமைச்சின் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு அனுப்பிய அதே அமைச்சின் சாரதி ஒருவர் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சின் நிருவாக உத்தியோகத்தர் தியுலப்பிட்டிய மெதகம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான திருமணமாகாதவர் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அமைச்சின் சாரதியாக பணிபுரியும் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் சுகாதார அமைச்சில் கடமையாற்றும் போது குறித்த நிருவாக உத்தியோகத்தரின் சாரதியாகவும் பணிபுரிந்துள்ளதாகவும், அவர் ஓய்வு பெற்ற பின்னர் அவரது முகநூல் பக்கத்தில் தோழியாக தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான சாரதி ஓய்வுபெற்ற அதிகாரியின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று, தனது அந்தரங்க உறுப்பை புகைப்படங்கள் எடுத்து ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரியின் கைபேசிக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி சில சமயங்களில் காணொளி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரியிடம் தனது நிர்வாணத்தை நேரலையில் காட்டினார்.

சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற அதிகாரி வெயாங்கொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்