கனடா குகதாசன் சம்மந்தரிடம் மன்னிப்பு கேட்க கொழும்பு செல்கிறார்!
திருகோணமலை மாவட்ட தமிழரசுகட்சி தலைவரும், ஏற்கனவே சம்பந்தரின் இணைப்பாளராக கடமையாற்றி கடந்த யூன் 5, ம் திகதி தமது இணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான கனடா குகதாசன் நாளை (18) ஞாயிற்றுக்கிழமை சம்மந்தரின் கொழும்பு இல்லத்துக்கு சென்ஞ சந்திக்கவுள்ளார்.
இரா.சம்பந்தனிடம் மன்னிப்பு கேட்பதற்காகவே இந்த சந்திப்பை குகதாசன் கேட்டுப் பெற்றதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரவித்தன.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்மந்தன் தமது பிரத்தியேக இணைப்பாளராகவும் திருகோணமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்கொண்டு செல்வதற்காகவும் கடந்த யூனல 05 தொடக்கம் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முன்னாள் நகர பிதா என்.இராசநாயகம் என்பவரை நியமித்திருந்தார்.
இதுவரை காலமும் கனடா குகதாசன் திருகோணமலை மாவட்டத்தில் சம்பந்தனின் இணைப்பாளர் என்ற கோதாவில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தார். அவரது நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்தே சம்பந்தன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சம்பந்தனின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, தொடர்ந்து செயற்பட முடியாத நிலைமைக்கு சென்ற குகதாசன், சரணடையும் முடிவுக்கு வந்ததாக தெரிய வருகிறது.
குகதாசன் அண்மையில் இராசநாயகத்திடம் சென்று தமது கவலைகளை கொட்டித்தீர்த்துள்ளார். தான் சம்மந்தருக்கு செய்த தவறுகள் தன்னால் மட்டுமல்ல தமிழ் அரசு கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சைக் கேட்டு சம்பந்தரை புறக்கணிப்பு செய்தமையை ஏற்றுக்கொண்டதாக தமிழ் அரசு கட்சி உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
நடந்த சம்பவங்களை கேட்டறிந்த இராசநாயகம், இனிமேல் எப்படி செயற்பட வேண்டுமென்பது பற்றி கனடா குகதாசனுக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார்.
அத்துடன், கொழும்புக்கு போய் சம்பந்தரிடம் மன்னிப்பு கேட்டு மனம் விட்டு நடந்த தவறுகளை சொல்லுமாறு ஆலோசனையும் கூறியுள்ளார். அத்துடன், நாளை ஞாயிற்றுக்கிழமை அரா.சம்பந்தனை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் அவரே செய்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து, நாளை சம்பந்தரை சந்திப்பதற்காக கனடா குகதாசன் இன்று பயணமாகிறார்.
இதேவேளை சம்மந்தரால் புதிதாக நியமிக்கப்பட்ட இணைப்பாளர் இராசநாயகத்தையும் சம்பந்தர் நாளை ஞாயிறு காலையில் தனியாக சந்திக்க கொழும்புக்கு வருமாறு பணித்துள்ளார்.
தமிழ் அரசு கட்சிக்குள் தனி அணியாக இதுவரை செயற்பட்ட அணியின் ஆலோசனை படியே குகதாசன் இதுவரை செயற்பட்டு வந்தார். அந்த தரப்பின் ஆலோசனைகளை கேட்காமல் தமது இணைப்பாளர் இராசநாயகத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு சம்மந்தர் குகதாசனுக்கு கட்டளை இடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




