முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் அமைந்திருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

Date:

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ் சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகளும் பாடசாலை காணி பாடசாலை மைதானம் என்பன கடந்த 1991ஆம் ஆண்டு முதல்- 32 வருடங்களாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணி இன்று (6) விடுவிக்கப்பட்டது.

களுவங்கேணி முறக்கொட்டாஞ் சேனை திருமலை வீதியுடன் இணைக்கும் பாதையும் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து32வருடங்களாக இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தமையினால் பொது மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்தி வந்த நிலையில் இன்று குறித்த பாதையும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கிழக்கு மாகாண இராணுவ தளபதி காணி விடுவிப்பு பாத்திரத்தை வழங்கி வைத்தார். பின்பு தனியார் காணிகள் காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை காணி தொடர்ந்து இராணுவத்தின் வசமே உள்ளது..

இந் நிகழ்வில் கிழக்கு மாகண இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுஜிப கெட்டியாராட்சி, மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, உதவி அரசங்க அதிபர் காணி நபரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, முறக்கொட்டன்சேனை இராணு முகாம் அதிகாரி, மாவட்ட பொலிஸ் பொறுப்பாதிகாரி, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-கிரான் நிருபர் –

spot_imgspot_img

More like this
Related

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்