திருமலை- கண்டி வீதி விபத்தில் 2 பேர் பலி

Date:

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கிண்ணியா பகுதியைச் 45 மற்றும் 47 வயதுடைய இருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்