யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த இடத்திலிருந்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் ரோந்து பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று, மதுபோதையில் இருந்த 41 வயதானவரை கைது செய்தனர்.
அவர் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.
கைதானவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1