பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார், விரைவில் வேறொரு இடத்திற்குச் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் இரண்டு நாடுகளுக்கு செல்லும் வகையில் அவருக்கு விசாக்கள் இருப்பதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஜெரோம் தன்னை கடவுளின் தூதர் என்றும், கவுளின் நற்செய்தியை அறிவிக்க வந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1